skip to main |
skip to sidebar
காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.ஆரோக்கியமான அழகுவெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தை புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அதோடு எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தை சீராக்குகிறது.நோய் எதிர்ப்பு சக்திஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.இதயநோயை குணமாக்கும் எலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தை பலமாக்குகிறது. எனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திறவுகோலாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
Original post by: http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/warm-lemon-water-benefits-aid0174.html

ஆட்டு ஈரல் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான சுவையான உணவு. இது மென்மையாக இருப்பதால் சிறுகுழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். நல்லெண்ணெயில் வேகவைப்பதால் கூடுதல் சத்து கிடைக்கும்.
ஈரல் - 500 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 4
மிளகுத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
நல்லெண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முதலில் ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி ஆட்டு ஈரலை போடவும், அதனுடன் பொடியாக அறிந்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சீரகம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். அதன்பின் அடுப்பை பற்ற வைக்கவேண்டும். அப்பொழுது சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு வேக வைக்கவும். அப்பொழுதுதான் ஈரலானது இறுகலாக இல்லாமல் மென்மையாக இருக்கும்.
ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும். பின்னர் வரமிளகாய் கிள்ளிப்போட்டு மிளகு தூள் தூவி லேசாக தண்ணீர் விடவும். மிதமான தீயில் வைத்து வேகவிடவும். அவ்வப்போது கரண்டி போட்டு கிளறவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். அதன் மீது கொத்தமல்லி தழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார்.
Original post by: http://tamil.boldsky.com/recipes/non-veg/pepper-liver-fry-recipe-aid0174.html
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
மிளகு தூள் – 5 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 4 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – 4 டீ ஸ்பூன்
எண்ணெய் – 100 மிலி
தயிர் – 200 மிலி
உப்பு - கால் டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு – சிறிதளவு
செய்முறை
சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, சிறிது உப்பு போட்டு முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.
பின்னர் தயிரில் சிறிதளவு உப்பு, அரைத்த பச்சை மிளகாய், பொடித்த மிளகு போட்டு கலக்கி ஏற்கனவே ஊற வைத்த சிக்கனில் போட்டு எல்லாவற்றையும் கலந்து மறுபடியும் முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசாக எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சிக்கனை மட்டும் தனியாக எடுத்து வேகவைக்கவும். மூடி போட்டு மிதமான தீயில் எரிய விடவும். 5 நிமிடம் வெந்த உடன் சிக்கனை திருப்பி விடவேண்டும். பின்னர் சிக்கன் நன்றாக வேகும் வரை திருப்பி விட வேண்டும். லேசாக எண்ணெய் விட்டாலே போதும் அதிக எண்ணெய் தேவையில்லை.
சிக்கன் நன்றாக வெந்த உடன் தட்டில் எடுத்து எலுமிச்சை சாறு விடவும். வாசனை சூப்பராக இருக்கும். சுவையான சிக்கன் டிக்கா ரெடி. இதை மைக்ரோவேவ் ஓவனிலும் செய்யலாம். வாணலியிலும் டீப் ப்ரை செய்யலாம்.
Original post by: http://tamil.boldsky.com/recipes/non-veg/chicken-tikka-masala-recipe-aid0174.html