Jul 9, 2012

கீரை கட்லெட்!!!


தேவையான பொருட்கள் :
முளைக்கீரை 1 கட்டு
கடலை மாவு 12 கப்
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 2
இஞ்சிபூண்டு விழுது 1 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிதளவு
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயம், கீரை, பச்சை மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய கீரை, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி வைத்துவிடுங்கள்.
பிறகு கீரையில் இருக்கும் நீரை வடிகட்டி விட்டுங்கள். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு விழுது, கொத்தமல்லி, வேண்டுமென்றால் சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அதோடு கீரையையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு இந்த கலவையை வதக்கிய கீரையுடன் சேர்த்து சிறு தீயில் நன்கு கிளறவும்.
இந்த கீரை கலவையானது சுருண்டு வரும் போது அதனை இறக்கி, ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தவும். பின் ஆறியதும் துண்டாக வெட்டி அதனை அப்படியே சாப்பிடலாம்.
வேண்டுமென்றால் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் அந்த துண்டுகளை தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி நன்கு பொன்னிறமாகும் வரை புரட்டி எடுத்து சாப்பிடலாம்.

Original post by:  http://tamil.boldsky.com/recipes/veg/spinach-cutlet-001514.html

இளநரையை போக்க...


1. நெல்லிக்காயை தினமும் ஒன்று என்று சாப்பிட்டு வர, நமது உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். மேலும் அதிலுள்ள வைட்டமின் "சி" முடியை கருமையடையச் செய்யும்.
2. மருதாணி இலையை அரைத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி பூசி வந்தால், இளநரையானது விரைவில் நீங்கும்.
3. கறிவேப்பிலையை சமைக்கம் உணவில் அதிகம் சேர்த்து, அதனை சாப்பிட்டால் உடலில் இரும்புச்சத்து அதிகமாகி கூந்தலானது கருமையாக வளரும்.
4. நான்கு ஸ்பூன் மருதாணிப் பொடி, இரண்டு ஸ்பூன் காபி அல்லது டீ டிகாஷன், ஒரு முட்டை, அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து, தலையில் நன்றாக தேய்த்து, ஒரு மணிநேரம் ஊற வைத்துப் பின் கூந்தலை குளிர்ந்த நீரில் அலசினால் இளநரையானது படிப்படியாக குறையும்.
5. கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, கூந்தலுக்கு தடவி வந்தால் இளநரையானது வராமல் இருக்கும்.
6. வெள்ளைப் பூவான கரிசாலையை நன்கு காய வைத்து, அரைத்து பொடி செய்து, ஒரு மாதம் இளநீரிலும், ஒரு மாதம் தேனிலும் கலந்து உண்ண வேண்டும். இதனால் இளநரை மாறும்.
7. தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தலைக்கு பூசி நன்கு மசாஜ் செய்து, குளித்து வந்தால், இளநரையானது போகும்.
ஆகவே மேற்கூறிய இயற்கையான உணவினாலும், சரியான பராமரிப்பாலும் இளநரையை வராமலும், வந்த இளநரையை போகவும் செய்யலாம்.

Original post by: http://tamil.boldsky.com/beauty/hair-care/2012/easy-tips-prevent-white-hairs-001521.html

Mar 20, 2012

இதயத்தை பலமாக்கும் எலுமிச்சை பானம்!



காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

ஆரோக்கியமான அழகு

வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தை புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அதோடு எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தை சீராக்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.

இதயநோயை குணமாக்கும் 

எலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தை பலமாக்குகிறது. எனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திறவுகோலாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Original post by: http://tamil.boldsky.com/health/diet-fitness/2012/warm-lemon-water-benefits-aid0174.html

ஈரல் மிளகுத்தூள் வறுவல்





ஆட்டு ஈரல் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான சுவையான உணவு. இது மென்மையாக இருப்பதால் சிறுகுழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். நல்லெண்ணெயில் வேகவைப்பதால் கூடுதல் சத்து கிடைக்கும்.

ஈரல் - 500 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 4
மிளகுத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
நல்லெண்ணை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

முதலில் ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி ஆட்டு ஈரலை போடவும், அதனுடன் பொடியாக அறிந்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சீரகம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். அதன்பின் அடுப்பை பற்ற வைக்கவேண்டும். அப்பொழுது சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு வேக வைக்கவும். அப்பொழுதுதான் ஈரலானது இறுகலாக இல்லாமல் மென்மையாக இருக்கும்.

ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும். பின்னர் வரமிளகாய் கிள்ளிப்போட்டு மிளகு தூள் தூவி லேசாக தண்ணீர் விடவும். மிதமான தீயில் வைத்து வேகவிடவும். அவ்வப்போது கரண்டி போட்டு கிளறவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். அதன் மீது கொத்தமல்லி தழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார். 


Original post by:  http://tamil.boldsky.com/recipes/non-veg/pepper-liver-fry-recipe-aid0174.html

மிளகு சிக்கன் டிக்கா



தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
மிளகு தூள் – 5 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 4 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – 4 டீ ஸ்பூன்
எண்ணெய் – 100 மிலி
தயிர் – 200 மிலி
உப்பு - கால் டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை

சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, சிறிது உப்பு போட்டு முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் தயிரில் சிறிதளவு உப்பு, அரைத்த பச்சை மிளகாய், பொடித்த மிளகு போட்டு கலக்கி ஏற்கனவே ஊற வைத்த சிக்கனில் போட்டு எல்லாவற்றையும் கலந்து மறுபடியும் முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசாக எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சிக்கனை மட்டும் தனியாக எடுத்து வேகவைக்கவும். மூடி போட்டு மிதமான தீயில் எரிய விடவும். 5 நிமிடம் வெந்த உடன் சிக்கனை திருப்பி விடவேண்டும். பின்னர் சிக்கன் நன்றாக வேகும் வரை திருப்பி விட வேண்டும். லேசாக எண்ணெய் விட்டாலே போதும் அதிக எண்ணெய் தேவையில்லை.

சிக்கன் நன்றாக வெந்த உடன் தட்டில் எடுத்து எலுமிச்சை சாறு விடவும். வாசனை சூப்பராக இருக்கும். சுவையான சிக்கன் டிக்கா ரெடி. இதை மைக்ரோவேவ் ஓவனிலும் செய்யலாம். வாணலியிலும் டீப் ப்ரை செய்யலாம்.

Original post by: http://tamil.boldsky.com/recipes/non-veg/chicken-tikka-masala-recipe-aid0174.html

Apr 9, 2011

படித்ததில் பிடித்தது - 2

 விட்டு கொடுத்தவர்கள் 
கெட்டு போவதில்லை...
கெட்டு போனவர்கள் 
விட்டு கொடுபதில்லை... 

நன்றி: திரு. கவிதை கண்ணன் 

Jun 9, 2010

இப்படியும் யோசிப்போம்

அபிஷே க்கும்...
மில்க் ஷே க்கும்...
உள்ள ஒற்றுமை என்ன....
.
.
.
.
.
.
.
.
.
.
ரெண்டுக்கும் 'ஐஸ்' வேணும் :)

May 28, 2010

Aug 26, 2009

அரசியல்வாதி

கரும்புள்ளிகளை மக்களுக்கு வைத்துவிட்டு
பெரும்புள்ளி ஆனவர்கள்

Aug 20, 2009

பெண் பூ

பூவெல்லாம் உன் வாசம்...
பூவுக்குள் பூகம்பம்...
ம்ம்ம்.... இது ஏதும் சரியாய் இல்ல...
வாடும் மலர்களுக்கு முன் வாடா மலர்

குறிப்பு: பூ முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட நண்பிக்காக...

அந்த வாடா மலரின் ரகசியம்...
இந்த வற்றா நதி

குறிப்பு: அதே பூ முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட அவரின் கணவருக்காக...